Monday, 26 June 2023

தமிழ்

படித்தத் தமிழை 
பகிற நவின்றேன் 
பாட்டை...
பின்பற்றும் பண்பாட்டை...

புவியில் பல்மொழியிருப்பின் 
பண்மொழி பாடும் தமிழன்றோ 
பான்மையிலும் பன்மை 
பெருமையிலும் பெருமை

பாடமாய்க் கற்றேன் பள்ளியில் 
பாடினேன்... போற்றினேன்...
பயின்றேன்... நவின்றேன்... 
பழந்தமிழ் பாட்டைப் பாடினேன் 

பரந்த வானில் பறந்தேன்
பாமரனின் பாசுரம் பிணைந்தேன் 
பற்றன்றோ பேதையின் இலக்கு 
பைந்தமிழன்றோ அதை சேரும் பாதை 
 

No comments:

Post a Comment